உணவில்லாமல் தவித்த குரங்குகளுக்கு உணவளித்த மனித நேய காவல்துறை!
குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீசார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவு வழங்கிய போலீசார் பொதுமக்கள் பாராட்டு
இந்தியா முழுவதும் தப்போது கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தீவிர முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்பொழுது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
மனிதர்களை நம்பி வாழும் ஐந்தறிவு உயிரினங்ளும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வருகின்றது. .இதனிடையே சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் 500 க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் சுற்றுலா தளத்திற்கு வரும் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றது.
தற்பொழுது ஊடங்கு உத்தரவால் சித்தன்னவாசல் சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குரங்குகள் உணவின்றி தவித்து வருகிறது.இதனை அறிந்த அன்னவாசல் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன்,போலீசார் வரதராஜன்,சமூக ஆர்வலர் வெற்றி உள்ளிட்டோர் சித்தன்னவாசலில் உள்ள குரங்குகளுக்கு உணவுகள் பழங்கள், பொறி வழங்கி பசியை போக்கி மனித நேயத்துடன் செயல்பட்டனர்.இதனை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu