புதுக்கோட்டை இறுதிக்கட்ட பிரசாரத்தில் இன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்

புதுக்கோட்டை இறுதிக்கட்ட பிரசாரத்தில்  இன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
X

 அன்னவாசல் 9வது வார்டு மாவட்ட ஊராட்சி போட்டியிடும்  பழனிச்சாமிக்கு ஆதரவாக தீவிர  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்  புதுக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா  மற்றும் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் பெரியண்ணன் அரசு 

இறுதிக் கட்ட பிரசாரத்தில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜா- முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன்அரசு ஆகியோர் வாக்கு சேகரித்தனர்

புதுக்கோட்டையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் திமுக இன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் கிழக்கு 9-வது வார்டு மாவட்ட ஊராட்சி பதவிக்கு போட்டியிடும், பழனிச்சாமிக்கு ஆதரவாக இன்று திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். இன்று மாலை இறுதிக் கட்ட பிரச்சாரம் முடிவு பெற்ற நிலையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மற்றும் புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு ஆகியோர் அன்னவாசல் பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வீடு வீடாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்