டூ விலரிலிருந்து தவறி விழுந்த முதியவருக்கு முதலுதவி அளித்த முன்னாள் அமைச்சர்
இலுப்பூர் அருகே ராப்பூசலில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு முதலுதவி அளித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
இலுப்பூர் அருகே ராப்பூசலில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு முதலுதவி அளித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ராப்பூசல் வழியாக புதுக்கோட்டை செல்லும் வழியில் ராப்பூசல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவ்வழியே சென்ற விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தனது காரை நிறுத்தச் சொல்லி, அந்த முதியவருக்கு முதலுதவி அளித்து தண்ணீர் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கிய அந்த முதியவர் திமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu