மாத்தூர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள வீடுகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

மாத்தூர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள வீடுகளை முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
X

மாத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து அவதிப்பட்டு வரும் பொதுமக்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மாத்தூர் பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள், குழந்தைகளை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார்

மாத்தூர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள வீடுகளை முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து இன்று தகவலறிந்த விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாத்தூர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ள இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

உடனடியாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் இருக்கும் பொது மக்களை வேறு இடத்திற்கு மாற்றி தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாத்தூர் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மாத்தூர் பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியும் அவர்கள் தேவையான உணவுகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்