பள்ளி குழந்தைகளை காரில் ஏற்றி அவர்கள் வீட்டில் இறக்கிவிட்ட முன்னாள் அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நடந்து சென்ற பள்ளி குழந்தைகளை காரில் ஏற்றி அவர்களுடைய இல்லத்தில் இறக்கிவிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 8 வருடத்திற்கு மேலாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இரவு பகல் பாராமல் பல்வேறு பணிகளை ஆற்றினார். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எந்த பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அப்பொழுது சாலை விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு முதலுதவி செய்வது, தன்னுடைய வாகனத்தில் விபத்தில் அடிபட்ட அவர்களை ஏற்றி சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைகள் மேற்கொள்வது என பல்வேறு மனிதாபிமான செயல்களை செய்து வருவார்.
தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வீடு திரும்பும்போது மாலை நேரத்தில் பள்ளிகளுக்கு சென்று விட்டு சிறுவர்கள் வீடுகளுக்கு செல்வதற்காக சாலைகளில் நடந்து செல்வதைப் பார்த்த முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் தன்னுடைய வாகனத்தில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு அவர்களிடம் உரையாடிக்கொண்டே அவர்களுடைய இல்லத்திற்கு சென்று இறக்கி விட்ட சம்பவம் குழந்தைகளிடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் தங்கள் இல்லத்தில் கார்களில் வந்து இறங்கும் குழந்தைகளை பார்த்த பெற்றோர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து குழந்தைகளை காரில் ஏற்றி வந்து இறக்கிவிட்ட அமைச்சருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu