அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படம் அகற்றம்

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படம் அகற்றம்
X

திமுக கவுன்சிலர்கள்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை அகற்றினர்.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை திமுக கவுன்சிலர்கள் அகற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.

கூட்டம் தொடங்கியதும் திமுக கவுன்சிலர்கள் அரங்கில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை அகற்றக்கோரி கூச்சலிட்டனர். இதனையடுத்து அதிமுக கவுன்சிலர்கள், திமுக பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர். பின்னர் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்பு முன்னாள் முதல்வர் எடப்படி பழனிச்சாமியின் படம் கூட்ட அரங்கில் இருந்து அகற்றப்பட்டது. இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மின்வாரிய அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!