சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
X

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குடுமியான்மலையில் குடிநீர் குழாய் உடைந்து பலமாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது

புதுக்கோட்டையில் குடிநீர் பற்றாக்குறை என்பது எப்போது இருந்து வருகிறது. புதுக்கோட்டை நகர பகுதிகளில் எட்டு ரூபாய் பத்து ரூபாய் என குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலையில்தான் மக்கள் இருந்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமல்ல, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுமே போதிய குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் நீரை காசுகொடுத்து வாங்கி பயன்படுத்தும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை ,கீழ ரதவீதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கடந்த பல நாட்களாக சாலையில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடிவருகிறது. இது குறித்து நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இதனை உடனடியாக சரி செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Tags

Next Story