புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
X

இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது ஆசிரியைகளிடம், அவரவருக்கு உரிய கால அட்டவணைப்படி உரிய வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக அளவில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து, முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் சரியாக முகக்கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து, சரியான முறையில் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க அறிவுரைகள் வழங்கினார்.

குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை பார்வையிட்டு, கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் பள்ளித்தலைமை ஆசிரியை சாந்தாதேவி உடன் இருந்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!