பணத்தை நம்பி போட்டியிடவில்லை; மக்களை நம்பி போட்டியிடுகிறேன்: திமுக வேட்பாளர்

பணத்தை நம்பி போட்டியிடவில்லை; மக்களை நம்பி போட்டியிடுகிறேன்: திமுக வேட்பாளர்
X
விஜயபாஸ்கர் பணத்தை வைத்துக்கொண்டு போட்டியிடுகிறார் நான் மக்களை நம்பி போட்டியிடுகிறேன் என விராலிமலை திமுக வேட்பாளர்கூறினார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனுக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் பேசும்பொழுது, தனக்கு பிரசர் சுகர் போன்றவை இருக்கிறது. என்னுடைய உடல்நலனை பொருட்படுத்தாமல் தொகுதி மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். எனக்கு கட்டாயமாக நீங்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கைவாசல் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் இந்த தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை வைத்து வெற்றி பெறலாம் என அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். நான் மூன்று முறை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவி உள்ளேன் மீண்டும். திமுக சார்பில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உங்களிடம் வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். அவர் பத்து வருடங்கள் செய்த அனைத்தையும் நான் வெற்றி பெற்றால் பத்து நாட்களுக்குள் உங்களுக்கு செய்துவிடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தொடர்ந்து ஒருவரே எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெறுவது ஜனநாயகத்திற்கே அழகல்ல. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எந்த ஒரு பதவிக்கும் ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் பொதுமக்களுக்கு அரசு பதவிகளை வாங்கித் தருவேன். இதுதான் நான் போட்டி இடும் கடைசி தேர்தல். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களுக்கு சேவகனாக சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை தரவேண்டும் என பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்