கலெக்டர், எஸ்பி., நள்ளிரவு திடீர் வாகன சோதனை

கலெக்டர், எஸ்பி., நள்ளிரவு திடீர் வாகன சோதனை
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென நள்ளிரவு கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி.,வாகன சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் பிரச்சனைக்குரிய தொகுதியான விராலிமலை தொகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதவியாளர் வீட்டில் 45 லட்ச ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து விராலிமலை தொகுதியில் வாகன சோதனைகள் முறையாக நடைபெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் திடீரென இரவு 2 மணி வரை விடிய விடிய விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்டஎஸ்பி., பாலாஜி சரவணன் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு இரவு நேரத்தில் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ததால் விராலிமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!