விராலிமலை பகுதி பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற அடிப்படை வினாடி,வினா தேர்வினை பார்வையிட்ட சிஇஓ சாமிசத்தியமூர்த்தி
விராலிமலை பகுதியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக் சாமிசத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், விராலிமலை ஒன்றியம், நாகமங்கலம் எஸ்.எப்.எஸ். சி.பி.எஸ்.இ பள்ளி, நாகமங்கலம் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் புனித தோமையார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கற்றல், கற்பித்தல் நடைபெறுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இது போன்று அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற அடிப்படை வினாடி,வினா தேர்வினை பார்வையிட்டார். பின்னர் மாத்தூர் திரு இருதய சி.பி.எஸ்.இ பள்ளியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu