விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

விராலிமலை அருகே கிணற்றில்  தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
X

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

விராலிமலை, வெள்ளனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் காரைதோப்பு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் மகன் வெள்ளைச்சாமி (வயது-14) சிறுவனுக்கு சரியாக கண்தெரியாது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிபார்த்தபோது ராஜகுளத்தூர் என்ற ஊரில் உள்ள சமுதாய கிணற்றில் விழுந்து இறந்து கிடப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார் தீயணைப்புதுறை உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா