ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பிஜேபி வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பிஜேபி வேட்புமனு தாக்கல்
X

மாவட்ட ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவை எதிர்த்து பிஜேபி வேட்பாளர் சாந்தார் வேட்புமனு தாக்கல்

மாவட்ட ஊராட்சி 9-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தனித்து போட்டியிடுவதாக கூறி பிஜேபி வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது

அதிமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை முதலே அதிமுக நாம் தமிழர் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற பல்வேறு கட்சியினர் தங்களுடைய வேட்பாளர்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.இந்நிலையில், மாவட்ட ஊராட்சி 9-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக அழகு சுந்தரி இன்று தனது வேட்பு மனுவை அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சி 9 -ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தனித்து போட்டியிடுவதாக கூறி ,துடையூர் பகுதியை சேர்ந்த சாந்தார் என்பவர் பிஜேபி சார்பில் அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இச்சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare