நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் :ஆயுஷ் மருத்துவர் தகவல்
முன்கள பணியாளர்களுக்கு ஆர்கானிக் ஆல்பா மாத்திரைகள் வழங்கிய மருத்துவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட ஆயுஷ் மருத்துவர் சுயமரியாதை அங்கு பணிபுரியும் செவிலியர்கள்,கிராமப்புற செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கினார்.
பின்னர் ஆயுஷ் மருத்துவர் சுயமரியாதை கூறியதாவது:
பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 5 மாத்திரைகள்,5 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 3 மாத்திரைகள்,5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 2 மாத்திரைகள் நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இம் மாத்திரைகளை தொடர்ச்சியாக 3 நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் .பின்னர் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த மாத்திரை உட்கொண்ட 3 வாரங்களுக்கு பின்பு இதே போல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்வின் போது டாக்டர் சௌந்தர்யா,பல் மருத்துவர் நிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu