முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி வருகின்றனர்
கடந்தஅதிமுக ஆட்சியில் எட்டரை வருடங்களாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அதிகளவில் சொத்து சேர்த்துள்ளதாக அதிமுக ஆட்சி காலத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, அலுவலகங்கள், கோவையிலுள்ள மாமனார் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள வீடு மற்றும் குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே வருமானவரித்துறை சோதனைகளில் அதிகளவில் சொத்து சேர்த்ததாக ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றிச் சென்றனர். இந்தநிலையில் புதிதாக திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி. வீரமணி உள்பட 3 அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அதிமுக ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக நான்காவதாக இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சென்னை வீடு உள்ளிட்ட அலுவலங்கள் என 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக,புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் உள்ள வீடு மற்றும் திருவேங்கைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் கல்குவாரிகள், புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்ஏஎஸ். சேட், நத்தம்பண்ணை ஊராட்சித்தலைவர் ஏவிஎம். பாபு, ஒப்பந்ததாரர் சோத்துப்பாளை முருகேசன் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவதால் அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu