அண்ணாவாசலில் ஒலிப்பெருக்கி மூலம் ஊரடங்கு எச்சரிக்கை

அண்ணாவாசலில் ஒலிப்பெருக்கி மூலம் ஊரடங்கு எச்சரிக்கை
X

கோப்பு படம்

அண்ணாவாசல் பகுதியில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே ஒலிப்பெருக்கி மூலம் ஊரடங்கு எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிக அவசிய தேவைகளுக்கு வெளியே வர வேண்டும்.

அப்படி வெளியே வரும்போது வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விளக்கிக் கூறி துணைக்காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு தொடர்ந்து அன்னவாசல் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாகனத்தின் மூலம் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடம் நேரடியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!