ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்குங்கள்- அமமுக வேட்பாளர்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்குங்கள்- அமமுக வேட்பாளர்
X

பத்து வருடம் உங்களிடமிருந்து சம்பாதித்த பணத்தை உங்களுக்கு தருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் தருவதை வாங்கிக் கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என அமமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.

விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர் கார்த்திக் பிரபாகரன் பேசும் போது, கடந்த பத்து வருடங்களாக உங்களிடம் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை தற்போது உங்களுக்கு பொங்கல் சீர், வேட்டி சேலை, டிவி என பரிசுப் பொருட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி வருகிறார். ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனையும்,பரிசுப்பொருளையும் வாங்கிக் கொள்ளுங்கள்.ஆனால் மறக்காமல் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என பொதுமக்களிடம் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!