கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்

கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்
X
அன்னவாசல் அருகே கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பிராம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி உஷா (வயது 25).இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் உஷா மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே, உறவினர்கள் இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. ஆனால், உஷாவிற்கு பிரசவவலி அதிகரித்தது. இதனால், நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவாபஸ்கரன் உதவியுடன் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

அப்போது உஷாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. பின்னர், ஆம்புலன்சில் தாயும், சேயும் அழைத்துச் சென்று அன்னவாசல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தக்கநேரத்தில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை உஷாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதே போன்று இலுப்பூர் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நேற்று முன்தினம் இலுப்பூர் அருகே வீட்டில் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்