ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் : முன்னாள் அமைச்சர் சொல்றார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்  : முன்னாள் அமைச்சர் சொல்றார்
X

மாவட்ட ஊராட்சி குழு 9-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அழகு சுந்தரி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். உடன் முன்னாள் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர்,அன்னவாசல் ஒன்றிய குழுத்தலைவர் வீ.ராமசாமி  

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஊராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட 48 பதவிகளுக்கு அக்.9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறு கிறது. அதே போன்று, தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட 48 பதவிகளுக்கு அக்.9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதில், மாவட்ட ஊராட்சி குழு 9-ஆவது வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அதிமுக வேட்பாளராக அழகு சுந்தரி அறிவிக்கப்பட்டார். அன்னவாசலில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஊர்வலமாக சென்று, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிமுக வேட்பாளர் அழகு சுந்தரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது குறித்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுக வலுவோடு இருக்கும் கட்சி என்றார். வேட்பு மனு தாக்கலின் போது, அன்னவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்