ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி  அருகே 10 அடி நீள  மலைப்பாம்பு பிடிபட்டது
X

அன்னவாசல் அருகே பள்ளி வளாகத்தில் தீயணைப்பு துறை மூலம் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

அன்னவாசல் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வளாகப்பகுதியில் இன்று மலைம்பாம்புஒன்று கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்வேலை செய்யும் அரசு ஒப்பந்தகாரர் எழுவன்இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்குதகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புநிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்டமலைப்பாம்பு சுமார் 10-அடி நீளமும் 20-கிலோ எடையும் இருந்ததாக தெரிவித்தனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare