இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும்: வேளாண்துறை அமைச்சர்

வேளாண் துறைக்கு போடப்படும் தனி பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அரசு வேளாண் அண்ணா பண்ணையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், காவேரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியாக இருந்தாலும் அதை டெல்டா மாவட்டங்களில் சேர்க்காததால் குறுவை தொகுப்பு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விடுபட்டுள்ளது. தற்போதுதான் கோரிக்கை வந்துள்ளது. தமிழக முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தையும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பார். பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் இந்த ஆண்டு போடும்போது இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதிகள் ஒதுக்கப்படும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு தமிழக முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்அரசு பண்ணைகள் பலப்படுத்தப்படும் வேளாண் துறை முடுக்கி விடப்படுகிறது. மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கப்படும்.

வேளாண்துறை பட்ஜெட் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கும் போது அவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியுள்ளனர். அதையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வேளாண் பட்ஜெட்டில் அதற்கு உரிய தீர்வு கிடைக்கும். வேளாண்மை பட்ஜெட் போடுவதற்கு முன்பு எந்த அரசும் இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்டதில்லை. தற்போதுதான் விவசாயிடம் கருத்து கேட்டு பட்ஜெட் போடப்படுகிறது என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil