இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
X
இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும், மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்றுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி காமராஜரின் பிறந்த நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி அவர்களின் அறிவுரையின்பேரில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன் தலைமையில் காமராஜரின் 119 வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர்கள் பீட்டர், இசக்கிமுத்து மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story