சித்தன்னவாசலுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி ஆனால் படகு சவாரிக்கு தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதியும், அங்குள்ள படகு குழாமில் படகு சவாரி செய்ய தடையும் விதிக்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாகும். கோவிட் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 20.4.2021 அன்று மூடப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு கோவிட் வழிக்காட்டு நெறிமுறைகளுடன் 5.7.2021 முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புதுக்கோட்டை சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தை 50 சதவீத பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சித்தன்னவாசல் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பார்வையிடவும், பொழுது போக்கு பூங்காவில், படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளதால், அதைத் தவிர்த்து மற்ற இடங்களை 50 சதவீதம் பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கவிதா ராமு .

Next Story
ai solutions for small business