விராலிமலை அருகில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

விராலிமலை அருகில்  அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
X

விராலிமலை பகுதியில்  மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

விராலிமலை அருகில் ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளியவர் கைது. டிராக்டர் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மணல் அள்ளுவதாக விராலிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இந்நிலையில் ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் முல்லையூர் துலுக்கம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் விக்னேஸ்வரன் என்பவர் அவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் அள்ளுவதை கண்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் இதுபோன்று இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil