புதுக்கோட்டை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை

புதுக்கோட்டை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தீராத நோய் காரணமாக விரக்தியடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் கல்லம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி மனைவி சின்னப்பொன்னு (46) .இவர் அன்னவாசலில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிலகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்னப்பொன்னுக்கு தீராத ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சின்னப்பொன்னு இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லையாம். இந்த நிலையில் நேற்று காலை எல்லையாப்பட்டி பிலியடிக்காடு வேப்பமரத்தில் சின்னப்பொன்னு தூக்கில் சடலமாகத் தொங்குவதாக அப்பகுதியினர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story