விவசாயத்தை அழிக்கும் தனிநபர்களின் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்

விவசாயத்தை அழிக்கும் தனிநபர்களின் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்
X

புதுக்கோட்டை மாவட்டம் சிருஞ்சுனையில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான 1.8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்தவிவசாய நிலத்தில் பரமசிவம் தோட்டப்பயிர்கள் தென்னை மரம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் இவர் நிலத்தைச் சுற்றி இன்னும் சிலரும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் தனி நபர்கள் சிலர் அரசின் அனுமதி பெறாமல் கடந்த சில ஆண்டுகளாக கல்குவாரி அமைத்து கற்கள் எடுத்து வந்த நிலையில் குவாரியில் வைக்கப்படும் வேட்டாள் அதிலிருந்து வரும் கற்கள் விவசாய நிலத்தில் மீது விழுந்து விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயி பரமசிவம் புகார் கூறி குவாரியை நிறுத்திய நிலையில் தற்போது மீண்டும் அந்த குவாரிக்கு அருகாமையிலேயே புதிய குவாரியை தனிநபர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த குவாரியால் விவசாய நிலத்திற்கு பாதிப்பு என்று பரமசிவம் உள்ளிட்ட விவசாயிகள் மீண்டும் புகார் கொடுத்த நிலையில் குவாரி நடத்தும் தனிநபர்கள் விவசாயி பரமசிவத்தை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் மேலும் விவசாயத்திற்கு அருகே உள்ள பொது இடத்தில் நீண்ட காலமாக மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து வந்த நிலையில் குவாரி உரிமையாளர்கள் அங்கு தண்ணீர் எடுக்க தடை விதித்து வருவதாகவும் மேலும் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாரை பொது இடத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கக்கூடாது என்று மிரட்டி எழுதி வாங்கி உள்ளதாகவும் இதனால் உழுத இடத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக இந்த குவாரியை நிறுத்தி விவசாயத்தை காக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றும் தொடர்ந்து விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் எடுக்க உறுதி செய்ய வேண்டும் என விவசாய பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!