பைக்கில் வந்து அமைச்சர் வேட்பு மனு தாக்கல்

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மோட்டார்பைக்கில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய 3 பேர் மட்டுமே அனுமதி என்ற நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மட் அணிந்து மோட்டார்பைக்கில் வந்து தனதுவேட்புமனுவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னர்,பத்திரிகையாளர் சந்திப்பின் போது விராலிமலை தொகுதி வாக்காளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஏற்கனவே இந்த விராலிமலை தொகுதி வளர்ச்சிக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறேன் மீண்டும் விராலிமலை தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!