அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் வாக்கு சேகரிப்பு

அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் வாக்கு சேகரிப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்காக அவரது மகள் வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுவது விராலிமலை சட்டமன்றத் தொகுதி. இங்கே இரண்டு முறை ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தன்னுடைய குழந்தைகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பிரச்சாரத்தை துவங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடையே தான் செய்த திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி தனக்கு வாக்களிக்க வேண்டுமென பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவருடைய மூத்த மகள் ரித்தன்யா பிரியதர்ஷினி, விஜயபாஸ்கர் உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய தந்தைக்காக பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார். தன்னுடைய தந்தை என்னென்ன விராலிமலை தொகுதிக்காக செய்துள்ளார் என்பது குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே சென்ற முறை நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!