களப்பணியில் மாணவிகள் -விவசாயிகள் பாராட்டு

களப்பணியில் மாணவிகள் -விவசாயிகள் பாராட்டு
X

அன்னவாசல் பகுதியில் களப்பணியில் ஈடுபட்டுள்ள மதர் தெரசா வேளாண்மைக்கல்லூரி இறுதியாண்டு மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் பாராட்டினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகள் குழுவினர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கீழக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் பிப்ரவரி 20 ம் தேதி முதல் களப்பணி ஆற்றி வருகின்றனர். பிப்ரவரி 20 ல் தங்களது களப்பணியை கீழக்குறிச்சியில் தொடங்கிய மாணவிகள் சிறு நாடகம் நடத்தி அதன் மூலம் கிராம தங்கல் திட்டத்தினை பற்றி மக்களுக்கு எடுத்து கூறினார்கள்.சமுதாயக்கூடத்தில் மரக்கன்றுகள் நட்டினர்.

மேலும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளின் நிலத்தில் தென்னையில் வேரூட்டம் மற்றும் வாழையில் வேர் உறிஞ்சும் சிகிச்சை பற்றியும் ஐந்திலைக் கரைசல் மற்றும் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர்.கீழக்குறிச்சி கிராமத்தில் களப்பணி ஆற்றி வரும் மாணவிகளை அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!