தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
X
குடுமியான்மலை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேர் வெள்ளோட்ட விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது, இந்த கோவிலில் தமிழ் கல்வெட்டுக்களும் உள்ளது. இந்நிலையில் இந்தக் கோவில்களில் நடைபெறும் தேர்த்திருவிழா கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் சுவாமி திருத்தேர் புதியதாகவும் அம்பாள் கோவில் தேர் புனரமைப்பு செய்யும் பணி சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு தேர்களின் பணி முடிவடைந்து இன்று திருத்தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருத்தேர் வெள்ளோட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் குடுமியான்மலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் கோவிலுக்கு முன்பு உள்ள 4 வீதிகளையும் சுற்றி இரண்டு தேர்களும் இறுதியாக நிலை நின்றது. மேலும் இனி வரக்கூடிய காலங்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் தேர் திருவிழாவானது நடைபெறு மென ஊர் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil