பொன்னமராவதியில் நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம்

பொன்னமராவதியில் நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொப்பனாபட்டி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வேகத்தடையில் வெள்ளை நிற சாயம் அழிந்து உள்ளதால் வெளியூரில் இருந்து பொன்னமராவதிக்கு வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் அளவிற்கு வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை சார்பில் காவல் உதவி ஆய்வாளர் ரகுராம் முன்னிலையில் வேகத்தடைக்கு நெடுஞ்சாலை துறையினர் வெள்ளை நிற சாயத்தை பூசினர்.

விபத்துக்களை தடுக்கும் விதமாக வேகத்தடைக்கு வெள்ளை நிற சாயம் பூசிய நெடுஞ்சாலை துறையினருக்கும், இதற்கு உதவிய காவல் துறையினருக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture