பொன்னமராவதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வலையபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஷ் தலைமை வகித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் 57வது பிறந்த நாளை முன்னிட்டு, இருநூறு ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட மளிகைப் பொருட்களை, புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரும், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஷ் வழங்கினர்.
விழாவில், மாவட்ட பொறுப்பாளர்கள், பொன்னமராவதி ஒன்றிய தலைவர் சண்முகம், ஒன்றியச் செயலாளர் கோபிநாத் ராஜேந்திரன், ஒன்றியப் பொருளாளர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்திகேயன்,ஒன்றிய மாணவரணி பொருளாளர் நாகராஜன்,நகரச் செயலாளர் விக்னேஷ்,மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu