புதுக்கோட்டை அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்
X

புதுக்கோட்டை அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெருங்குடி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் விமரிசையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பெருங்குடி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் விமரிசையாக நடைபெற்றது.

எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை,திருநெல்வேலி,மதுரை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாட்டுவண்டிபந்தயம் வீரர்கள் கலந்து கொண்டனர்.பந்தயத்தில் மாட்டு வண்டி பந்தயம் வீரர்கள் தங்களுடைய மாடுகளை விரட்டி சென்றதால் பந்தயத்தில் மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்தன.

ஒருவருக்கு ஒருவர் முந்திச் சென்று பரிசுகளை தட்டிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களுடைய பந்தயத் திறமைகளை வெளிப்படுத்தினர். பந்தய முடிவில் முதல் பரிசை தஞ்சையை சேர்ந்த கீர்த்தி நாட்டார் அணியும் இரண்டாவது பரிசை அறந்தாங்கி இளைஞர் அணியும் மூன்றாவது பரிசை அரிமளம் ஐயப்பன் அணியும் வெற்றி பெற்றது.சீறிப் பாய்ந்து வந்த மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

Tags

Next Story
ai marketing future