/* */

பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில் களை கட்டிய மீன் பிடி திருவிழா

பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில் கட்டிய மீன் பிடி திருவிழா களை கட்டியது.

HIGHLIGHTS

பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில் களை கட்டிய  மீன் பிடி திருவிழா
X

பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில்  மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் செவிலி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும்.

ஜாதி,மதம் பாராமல் நடைபெறும் இந்நிகழ்வில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றியும் மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட செவிலி பெரிய கண்மாயில் செவலூர்,மலையடிப்பட்டி, குழிபிறை,பனையப்பட்டி ,ஆத்தூர்,வீராணாம்பட்டி,செம்பூதி,ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா,வலை,கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர்.


அதில் ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி,குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

Updated On: 3 April 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  4. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  5. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  7. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  8. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  9. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  10. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!