அரசமலையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர்மோர் பந்தல்

அரசமலையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர்மோர் பந்தல்
X

அதிமுக சார்பில் அரசமலையில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட  செயலாளர் வைரமுத்து,  பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கினார். 

அரசமலையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமலையில் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் கோடை காலத்தில், பொது மக்கள் தாகம் தணிக்கும் வகையில், இலவசமாக தர்பூசணி பழம் மற்றும் கோடைகால நீர்மோர் பந்தலை, அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.

இதில், சுமார் நாள்தோறும் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு வழங்கி வருகின்றனர். நீர் மோர் பானகம் மற்றும் தர்பூசணி வழங்கப்படுவது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தண்ணீர்பந்தலை பொன்னமராவதி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அரசமலை முருகேசன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் விராச்சிலை, தொழிலதிபர் குமாரசாமி மற்றும் மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலவயல் சரவணன், பொன்னமராவதி வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சேகர் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!