வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் அமைச்சர், எம்பி வழங்கினர்

வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் அமைச்சர், எம்பி வழங்கினர்
X

புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கோவை நகரத்தார் சங்கம், சோனா கல்விக்குழுமம்  சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுபதி, எம்பி கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மருத்துவர்களிடம் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுதி, எம்பி கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு நகரத்தார் சங்கம் (கோயம்புத்தூர்) மற்றும் சோனா கல்வி குழுமம் (சேலம்) ஆகியவை சார்பில் இஜிசி கருவி, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி ஆகிய மருத்துவ உபகரணங்களை அமைசசர் ரகுபதி, எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மருத்துவர்களிடம் வழங்கினார்.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகள் வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று இந்த உதவிகளை வழங்கியதர்க்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார் இந்த நிகழ்ச்சியின் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!