அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்து: 2 பேர் உயிரிழப்பு

அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்து: 2 பேர் உயிரிழப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரியும் அரசு பேருந்து

புதுக்கோட்டை காரைக்குடி செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பாம்பாற்றுபாலத்தில் இன்று இரவு காரைக்குடியில் இருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இருவர் அதிக வேகத்தில் அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பேருந்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இருசக்கர வாகனம் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் டேங்க் வெடித்ததால் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்த 20 பயணிகளை உடனடியாக கீழே இறங்கி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அரசு பேருந்து முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மற்றும் திருமயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால், புதுக்கோட்டை காரைக்குடி செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!