டிப்பர் லாரி மோதி 13 ஆடுகள் பலி: டிரைவர் போலீசில் சரண்

டிப்பர் லாரி மோதி 13 ஆடுகள் பலி: டிரைவர் போலீசில் சரண்
X

விபத்தில்  பலியான ஆடுகள் 

புதுக்கோட்டை மாவட்டம்அரிமளம் அருகே ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதி ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி(40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் கூடாரம் அமைத்து செம்மறி ஆடுகள் மேய்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு அரிமளத்தில் இருந்து திருமயம் செல்லும் சாலை ஓரம் ஆடுகளை கூடாரத்தில் அடைத்து வைத்துள்ளார்.

அப்போது இதிலிருந்த 15 ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது ஏறியதில் 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தது இரண்டு ஆடுகள் படுகாயம் அடைந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவர் ஆளப்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த உடையப்பன் அரிமளம் போலீசில் சரணடைந்தார். மேலும் இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் மதி அரிமளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்