திருமயம் மருத்துவமனைக்கு அவசரகால மருத்துவ உபகரணங்களை வழங்கிய சட்டத்துறை அமைச்சர்

திருமயம் மருத்துவமனைக்கு அவசரகால மருத்துவ உபகரணங்களை வழங்கிய சட்டத்துறை அமைச்சர்
X

திருமயம் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சாரபில் அவசர கால கொரோனா தடுப்பு உபகரணங்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

திருமயம் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அவசரகால, மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அவசரகால மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு சுவாச மருந்து புகை கருவி- ஆக்ஸிஜன் செலுத்தும் அளவீட்டு உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், இரத்த அழுத்த அளவீட்டு உபகரணம், இதயத்துடிப்பு அளவீட்டு கருவிகள், மருத்துவர்களுக்கான சிறப்பு கையுறைகள், தலையணையுடன் கூடிய படுக்கை விரிப்புகள், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டுவழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், அரசு மருத்துவமனை அலுவலர்கள், திமுக மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!