/* */

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் அமைப்புகளை, ஆய்வு செய்த அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் அமைப்புகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் அமைப்புகளை,  ஆய்வு செய்த   அமைச்சர்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் அமைப்புகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி வட்டம் ஆலவயல் பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம் கூட்டு குடிநீர் குழாய் இணைப்புகளை இன்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அதிகாரிகளுடன் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ,மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

ஆலவயல் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் அமைச்சர் கே என் நேரு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு தெரிவித்ததாவது

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று ஆய்வு செய்ப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து திருமயம் அருகே உள்ள ஆலவயல் பகுதி வரை காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வருகிறது.

ஆனால் இந்தப் பகுதியிலிருந்து ஒரு 12 கிலோமீட்டர் தொலைவு வரை சாலை போடுவதற்காக குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் முறையாக தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் முறையாக 80% வரை வழங்கப்பட்டு வருகிறது ஒரு 20 சதவீதம் மட்டும் இது போன்ற சிறு, சிறு பழுதுகளை சரி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் முறையாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது காவேரி குடிநீரை திருட்டுத்தனமாக குவாரிகளுக்கு எடுக்கும் பணியில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை பற்றி முதல்வர்தான் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

Updated On: 14 Jun 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...