கண்ணில் கருப்பு துணி கட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கண்ணில் கருப்பு துணி கட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல். டீசல். எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அரிமளத்தில் உள்ள  வங்கியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை மாவட்டமட் அரிமளம் வங்கி முன் கண்ணில் கருப்பு துணி கட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள வங்கி முன்பு வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்கும், கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் பேரூராட்சியில் உள்ள இந்தியன் வங்கியில் கடன் கேட்டு கண்ணில் கருப்பு துணி கட்டி வந்தனர்.

இன்றைய கால சூழ்நிலையில் மக்களின் வருவாயை விட அதிக அளவிற்கு உயர்ந்து வரும் விலைவாசி மட்டுமின்றி நாளுக்கு நாள் சுங்கவரி கட்டணத்தையும் இந்த ஒன்றிய அரசு உயர்த்திக் கொண்டே போகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வினை கண்டித்து அரிமளம் இந்தியன் வங்கியில் கடன் கேட்டு மக்களோடு மக்களாக கண்ணில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு அரிமளம் ஒன்றிய செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் கலையரசன், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் தலைவர் ஜின்னா, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தமிழன் சாகுல் மற்றும் மாவட்ட தொகுதி ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்