மிரட்டுநிலை கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தொகுதிக்குட்பட்ட மிரட்டிய பகுதியில் நடைபெற்ற கால்நடைகள் மருத்துவ முகாமை ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை கிராமத்தில் கால்நடைகள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை காலம் என்பதால் கால்நடைகளுக்கு அதிக நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் என கருதி, தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்துவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்தது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தினம்தோறும் கால்நடை மருத்துவர் மூலம் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மிரட்டுநிலை ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து தொடக்கி வைத்தார்.
இந்த முகாமில், மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, மருதமுத்து கால்நடை மருத்துவர் ராஜபாண்டி , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால், ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லைய்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் மிரட்டுநிலை கிராமத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை மேற்கொண்டு பொதுமக்கள் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu