திருமயம் அருகே தென் சபரி தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

திருமயம் அருகே தென் சபரி தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கொசப்பட்டியில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலச கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

திருமயம் அருகே தென் சபரி தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கொசப்பட்டியில் கேரளாவில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளத 18ம்படி தென்சபரி தர்மசாஸ்தா ஆலய மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது‌.

வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து தனபூஜை,நவகிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, கோபூஜை,லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்களால் மங்கல இசையுடன் கோயில் வளாகத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கருடபகவான் கோயில் கலசத்தை சுற்றிவர பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டது.

அதன்பிறகு கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


கும்பாபிஷேக விழாவில் காரைக்குடி, புதுக்கோட்டை,திருமயம்,உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்களும் ராமநாதபுரம்,பொள்ளாச்சி,தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து அய்யப்ப பக்தர்களும் கலந்துகொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு