செப். 1 -இல் சட்டக் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும்: அமைச்சர் ரகுபதி தகவவ்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட உள்ளது என்றார் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று அளித்த பேட்டி: திருச்சி மத்திய சிறையில், சிறப்பு முகாம்களில் இருக்கும் தங்களை விடுதலை செய்யக்கோரி, போராடி வரும் இலங்கை தமிழர்களை, தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது.அவர்களை மத்திய அரசுதான் விடுதலை செய்ய வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்.. தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட உள்ளது. வரும் 26 -ஆம் தேதி வரை சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் தொடங்கப்படும். அதன்பிறகு முதல்வரின் ஆலோசனைக்குப்பின், முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கும் தேதி அறிவிக்கப்படும்
மத்திய சிறையில் சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகள் பாஸ்போர்ட் விசா உள்பட எந்தவித ஆவணங்களும் இல்லாமல், தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழக அரசைப் பொறுத்தவரை அவர்களுக்கு உணவு மற்றும் தாங்கும் இடம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் கையில் இல்லை. மதுரை உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதிப்பது குறித்த வழிகாட்டுதலை அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்.
கொடநாடு விவகாரத்தில் உண்மை நிலை, நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும்.சாட்சியை விசாரணை செய்வதற்கும் அல்லது மறுவிசாரணை செய்வதற்கும் தமிழக அரசுக்கு உரிமை உண்டு.சாட்சியை மறுவிசாரணை செய்வதை பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தவறானது. பழிவாங்கும் எண்ணம் திமுகவிற்கு கிடையாது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு தான் தேர்தல் அறிக்கையிலேயே, கொடநாடு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் வகையில்தான் நாங்கள் செயல்படுகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu