அதிக விலைக்கு உரம் விற்ற கடைக்கு சீல்: வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்ற கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை.
பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்ற கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலங்களில் உரம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் தட்டுப்பாடாக கிடைக்கிறது.
எனவே அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் விவசாயிகள் தேவையான உரங்கள் மற்றும் பொட்டாசியம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு தனியார் கடைகளில் பொட்டாசியம் மற்றும் உரங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா முழுவதும் உள்ள உரக்கடைகளில் வட்டாட்சியர் ஜெயபாரதி திடீர் ஆய்வு செய்தார்.
இதில் பொன்னமராவதி வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பொன்னமராவதி காந்தி சிலை அருகே உள்ள ஒரு உரக்கடையில் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்தக் கடைக்கு உடனடியாக வந்த பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி விசாரணை செய்து உடனடியாக சீல் வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu