கிராமங்களில் வாழும் மக்களுக்கான ஆட்சி நடக்கிறது: அமைச்சர் ரகுபதி பேச்சு

கிராமங்களில் வாழும் மக்களுக்கான ஆட்சி நடக்கிறது:  அமைச்சர் ரகுபதி பேச்சு
X

கால்நடை சாணம் மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

வரும்முன் காப்போம் திட்டத்தில் எத்தனை பேர் பயனடைகிறீர்கள் என்பதைப் பொறுத்தே திட்டத்தின் வெற்றி அடங்கி உள்ளது

கிராமங்களில் வாழும் மக்களுக்கான ஆட்சி நடத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி அருகே உள்ள மேலப்பனையூரில் ரூபாய் 51 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கால்நடை சாணம் மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து, மேலப்பனையூர் அரசு தொடக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மற்றும் வருமுன் காப்போம் திட்டத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்: ஒவ்வொருவருக்கும் உடல் நலத்தை பேணி காப்பது மிகவும் அவசியம் உடல்நலம் நன்றாக இருந்தால் அனைத்தும் நலமாக இருக்கும், பொதுமக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த வருமுன் காப்போம் திட்டத்தை, தற்போது மீண்டும் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

இந்த வருமுன் காப்போம் திட்டத்தில் பொதுமக்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ள தயங்கக் கூடாது. எத்தனை பேர் இந்த திட்டத்தில் பயனடைகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இந்த வருமுன் காப்போம் திட்ட முகாமிற்கான வெற்றி அடங்கி உள்ளது. கிராமங்களுக்கான கிராமங்களில் வாழும் மக்களுக்கான ஆட்சியாக உள்ளது. நிதி நெருக்கடியான காலகட்டத்திலும் கிராமப்புற நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கூடிய முதலமைச்சராக தமிழக முதல்வர் உள்ளார் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .

இதில், கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, ஒன்றிய குழு உறுப்பினர் அழகு சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil