பொன்னமராவதி நடமாடும் காய்கறி வாகனம் போலீஸ் டிஎஸ்பி துவக்கி வைத்தார்

பொன்னமராவதி  நடமாடும் காய்கறி வாகனம் போலீஸ் டிஎஸ்பி   துவக்கி வைத்தார்
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி வாகன விற்பனையை போலீஸ் டிஎஸ்பி செங்கமலகண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் தனஷ்கோடி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

புதுக்கோட்டை மாவடடம் பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி விற்பனையை போலீஸ் டிஎஸ்பி செங்கமலகண்ணன் துவக்கி வைத்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு இன்று முதல் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அடிப்படையில்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாகனங்கள் மூலம் அரசு நிர்ணயம் செய்த விலையில் பொதுமக்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் 5 காய்கறி வாகனங்கள் மூகலம் விற்பனை தொடங்கப்பட்டன.

பொன்னமராவதி பேரூராட்சியில் தொடங்கப்பட்ட நடமாடும் காய்கறிகள் வாகனத்தை மற்றும் இன்ஸ்பெக்டர் தனபாலன் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி.டிஎஸ்பி செங்கமலகண்ணன் கொடியசைத்து துவைக்கி வைத்தனர்..

மேலும் வாகன ஓட்டிகளிடம் பேசிய டிஎஸ்பி செங்கமலகண்ணன் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒதுக்கப்பட்ட வார்டுகள்,அரசு நிர்ணயம் செய்த விலையில் கூட்டம் கூட்டாமல் வியாபாரம் செய்தல், காய்கறி விற்பனை, காய்கறி வாங்குபவர்கள் முககவசம் அணிதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல், பொதுமக்கள் காய்கறிகளை கையால் தொடாமலும் பாதுகாத்து விற்பனை செய்தல் போன்ற அறிவுரைகளை விற்பனையாளர்களுக்கு டிஎஸ்பி செங்கமலகண்ணன் வழங்கினார்.

Tags

Next Story