பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்கள் பிடிப்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிடிப்பட்ட கடல் நீர்நாய்களை இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்பநடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பழைய நெடுவயல் பகுதியிலுள்ள தட்டான் கண்மாயில் சுற்றி திரிந்த 2 கநீர் நாய்கனை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மலையாண்டி மற்றும் வார்பட்டு நவமணி ஆகியோர் பார்த்துள்ளனர்.
தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்களை மற்றும் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகனம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கண்மாய்க்குள் கிடந்த கடல் நீர்நாயை பிடித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றி திரியும் ஒரு கடல்நீர் நாயினை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலில் தெரியும் இந்த அரிய வகை கடல் நீர் நாய் கிராம பகுதியில் சுற்றி எப்படி வந்தது எனவும் அதிசயமாய் பார்த்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu