பொன்னமராவதி பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுகாதாரத் துறையினர் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தி அபராதம் விதித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்படி, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி அறிவுறுத்தலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின் படி, பொன்னமராவதி பகுதியில் சுகாதார துறையினர் பொன்னமராவதி பேருந்து நிலையம், அண்ணா சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 55 வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி, முகக்கவசமின்றி வரும் பொதுமக்களுக்கு மாவட்ட பொது சுகாதாரத்துறை தனி செயலர் சேதுராமன் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி 17,300 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்தன், ராமலிங்கம், உத்தமன், வீரமணி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சதீஸ், வினோத் உள்ளிட்டோர் உடனிருந்து முகக்கவசமின்றி சுற்றித்திரிந்த பொதுமக்கள் மற்றும் 55 வணிக நிறுவனங்களுக்கு ரூ.17,300 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu