புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. கூண்டோடு தி.மு.க.வில் ஐக்கியம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னியிலையில் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வந்த நிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் தே.மு.தி.க. நிர்வாகிகள் கூண்டோடு நேற்று திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. வும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி ஏற்பாட்டின் பேரில் சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
ராமசாமியுடன் தே.மு.தி.க. துணைச்செயலாளர் சிவகுமார், மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி நேரு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் திருமயம் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் முத்துராமன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu